பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது


பள்ளி மாணவிக்கு பாலியல்தொந்தரவு; தொழிலாளி கைது


குளித்தலை:குளித்தலையில், பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளியை, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குளித்தலையை சேர்ந்த, அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுத்தார். இதையடுத்து, திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பெரிய கருப்பூரை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜை, 40, போக்சோ சட்டத்தின் கீழ், இன்ஸ்பெக்டர் கலைவாணி கைது செய்தார். பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement