வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

1

திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு மாணவர் தேவேந்திரராஜா பள்ளிக்கு செல்லும்போது கபடி போட்டி முன்விரோதத்தில் மூவரால் சரமாரியாக வெட்டப்பட்டார். காயமுற்ற மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் மாணவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிறகு திருமாவளவன் கூறியதாவது: மாணவர் வெட்டப்பட்டதை ஜாதி ரீதியிலான வன்முறையாகக் கருதி, போலீசார் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும். அவரது கல்வி பாதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் மற்ற மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் ஜாதிய வன்முறைகள் மிகப்பெரிய அபாயமாக உள்ளன என்றார்.

Advertisement