பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்

நியூயார்க்: காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடை ஏற்கவே முடியாது என ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில், ஜம்மு காஷ்மீர் குறித்த விவகாரத்தை, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவிற்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது:
காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. உலகளாவிய மத பாகுபாட்டை இந்தியா எதிர்த்து போராடுகிறது. காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடை ஏற்கவே முடியாது.
அவர்கள் வழக்கம் போலவே காஷ்மீர் குறித்து பேச தொடங்கி உள்ளனர். காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் நியாயமற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும். இந்த யதார்த்தத்தை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை; நிலத்தகராறில் அண்டை வீட்டுக்காரர் ஆத்திரம்
-
5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்