தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 13), 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,120 ரூபாய்க்கும், சவரன் 64,960 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று (மார்ச் 14) காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மதியம் தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போது இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (மார்ச் 15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்தது. இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.640 குறைந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

மேலும்
-
பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை; நிலத்தகராறில் அண்டை வீட்டுக்காரர் ஆத்திரம்
-
5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்