சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!

சென்னை: சென்னை அருகே நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலியானார்.



தமிழகத்தில் தினமும் பலர் தெருநாய் கடிக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் ஆங்காங்கே சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தைகள், பெரியவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. தற்போது சென்னை அருகே நாய்க்கடித்ததில் ஒருவர் பலியான விவரம் வெளியாகி இருக்கிறது.


வானகரம் பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஷேக் என்பவரை அங்குள்ள தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. காயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அதற்கென ஊசி போட்டுள்ளார்.


இந் நிலையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஷேக், திடீரென உயிரிழந்துள்ளார். நாய்க்கடியால் ஒருவர் பலியான விவரம் அறிந்த சுகாதாரத்துறையினரும், மாநகராட்சித்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement