பிளஸ் 2 வகுப்பு ஹிந்தி தேர்வு மறுவாய்ப்பு தர சி.பி.எஸ்.இ., முடிவு
புதுடில்லி, 'நாளை நடக்கவுள்ள சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வின் ஹிந்தி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மற்றொரு தேதியில் வாய்ப்பு வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஹிந்தி தேர்வு மார்ச் 15ல் நடக்கிறது. மார்ச் 14ல் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சில பகுதிகளில் 15ல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, 15ம் தேதி நடக்கும் ஹிந்தி தேர்வை தவறவிடும் மாணவர்கள், மற்றொரு தேதியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்
-
ஓய்வு பெற்ற ஆசிரியர் வாழ்க்கையில் விளையாடும் அரசு, பல்கலைக்கழகம்: ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி
Advertisement
Advertisement