காந்திகிராம பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு * கியூட் தேர்வுக்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேவுள்ள காந்திகிராம பல்கலையின் முதுநிலை, இளநிலை படிப்புகள், பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் 'பல்கலையின் 2025- -26 கல்வியாண்டுக்கான 14 இளங்கலை (3, 4 ஆண்டு ) பட்டப்படிப்புகள், 3 ஒருங்கிணைந்த இளம் அறிவியல் உடனான கல்வியியல் (4 ஆண்டு ) பட்டப்படிப்புகள், 2 ஒருங்கிணைந்த முதுநிலை(5 ஆண்டு ) பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை கியூட்(பொது நுழைவுத் தேர்வு) மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது.

சேர விரும்புவோர், https://curt.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் சேர்க்கைக்கான அடிப்படை தகுதிகள், குறிப்பேடு, மாணவர்கள் தேர்வு செய்யும் துறை, எந்த தேர்வு தாள்களை எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை பல்கலையின் இணையதளம்(https://ruraluniv.ac.in/admissions?content=CUET_UG2025) மூலம் பெறலாம். விண்ணப்பங்களை மார்ச் 23 வரை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement