முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்னையில் முதியவரை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி,72; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி,45; ரவியின் வீட்டு அருகே உள்ள மனையில் 2 அடி கலியமூர்த்திக்கு சொந்தம் இருந்ததால், இவர்களுக்குள் பிரச்சனை இருந்தது.

இதை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 6ம் தேதி ரவியை, கலியமூர்த்தி, இவர் மனைவி கலா, மகன் சண்முகம் ஆகியோர் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். விழுப்புரம் மேற்கு போலீசார் கலியமூர்த்தி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement