குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் பாராட்டப்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டில், விற்பனைக்காக 394 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்ததை, விழுப்புரம் தனிப்படை போலீசார் கைப்பற்றி, 3 குற்றவாளிகளை கைது செய்தனர். இதில், திறம்பட செயலாற்றிய தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், கஞ்சனூர் ஏட்டு சங்கர், போலீசார் வெங்கடாசலம், ராஜ்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோரை, விழுப்புரம் எஸ்.பி., சரவணன், நேற்று எஸ்.பி., அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Advertisement