வி.ஜி.பி., கேளிக்கை பூங்கா மீது நீலாங்கரை போலீசில் புகார்
நீலாங்கரை, திருநின்றவூர், நேரு நகரை சேர்ந்தவர் பாரூக், 35. அவரது குடும்பத்தார், உறவினர்கள் என, 11 பேர், கடந்த 2ம் தேதி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.பி., பொழுதுபோக்கு விளையாட்டு பூங்காவிற்கு சென்றனர்.
அங்கு, பாரூக்கின் மகன் முஹம்மது அர்ஷத், 6, 'டிரம்ப்போலின்' என்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்து, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சிறுவனை மீட்கவும், உதவி செய்யவும், கேளிக்கை பூங்கா ஊழியர்கள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, மகனை மீட்ட பாரூக், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்நிலையில், சிறுவனுக்கு இதுவரை 1.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்ட கேளிக்கை பூங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி, நேற்று நீலாங்கரையில் பாரூக் புகார் அளித்தார். போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து
-
ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்
-
கால்நடைத்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம்; நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
எடியூரப்பாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
-
பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
-
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்