டாக்டர் குடும்பம் மர்ம மரணம் பைனான்சியர்களிடம் விசாரணை
திருமங்கலம்,அண்ணா நகர், 17வது பிரதான சாலையில் வசித்தவர் பாலமுருகன் 53; டாக்டர். இவரது மனைவி சுமதி, 47; வழக்கறிஞர். தம்பதிக்கு, ஜஸ்வந்த் குமார் 19, லிங்கேஷ்குமார், 17 இருமகன்கள் உள்ளனர்.
பாலமுருகன், 'கோல்டன் ஸ்கேன்' என்ற பெயரில், மூன்று ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்தார்.
இவர் குடும்பத்தோடு நேற்று முன்தினம், வீட்டின் வெவ்வெறு அறைகளில் மர்மமான முறையில் இறந்து கிடந்தினர். தொழில் ரீதியாக ஏற்பட்ட, 5 கோடி ரூபாய் கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது :
வீட்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சமீபகாலங்களாக தனியார் பைனான்சியர்கள் ஐந்து பேர், பாலமுருகன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது தெரிந்தது. அவர்களில் மூவரிடம் விசாரித்தோம். புதிதாக கடன் வழங்கும் பரிந்துரைக்க வந்தாக கூறினர்.
பாலமுருகனின் மொபைல் போன் எண்களை வைத்து, கந்துவட்டிகார்கள், தனியார் பைனான்சியர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மனைவியின் ஆபாச அரட்டையை சகிக்க முடியாது: விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கருத்து
-
ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்
-
கால்நடைத்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம்; நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
எடியூரப்பாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
-
பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
-
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டர் கான்கிரீட்மேடையில் விரிசல்