ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்; விருத்தாசலம் பாலக்கரையில், இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கதிர்வேல், பாலவீரவேல், பொருளாளர்கள் வேலாயுதம், கணேசன் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை கண்டன உரையாற்றினார். அதில், ஸ்ரீவைகுண்டம் பிளஸ் 1 மாணவர் மீதான தாக்குதல் மற்றும் பட்டியலின மாணவர், இளைஞர்கள், கலப்புத் திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதலை தடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் ஜெயசீலன், சக்திவேல், அலெக்ஸ்பாண்டியன், செந்தில், கதிர்காமன், செல்வம் கலந்து கொண்டனர்.

Advertisement