பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுாரில் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் பக்கிரி, துணை செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ராமசாமி துவக்க உரையாற்றினார். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன்

9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன், வங்கி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ரமணி, காசிநாதன், ராமலிங்கம், சிவசிதம்பரம், ரத்தின ராமசாமி, கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

Advertisement