புறக்காவல் நிலையம் திறப்பு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுார் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு கேமராவையும், புறக்காவல் நிலையத்தையும் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும், கண்காணிக்கும் வகையில் மக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆர்.காவனுார் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 6 கண்காணிப்பு கேமராக்களும் அதன் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். இந்தப்பகுதியில் குற்றச்செயல்கள் நடக்கும் பட்சத்தில் கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க ஏதுவாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement