இடம்... பொருள்... ஆவல்! 'அன்பிற்கு' நாங்கள் காவல்

''வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நகரத்து சாலைகள், காற்று கூட உள்ளே வர முடியாத அளவிற்கான அடுக்குமாடி குடியிருப்புகள், இரவு, பகலாக தொடரும் பணிப்பளு என, இறுக்கமான சூழலில் இருந்து விடுபட நினைப்போர், உங்கள் செல்லத்துடன் இங்கே வந்து இளைப்பாறலாம்,'' என்கின்றனர், பெங்களூருவில் உள்ள, 'பப்ஸ் என் கப்ஸ்' பெட் ரெசார்ட் உரிமையாளர் ராகுல் ரஞ்சன்.
செல்லமே பக்கத்திற்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை
தொழில்நுட்ப உலகத்திற்குள் தொலைந்துவிட்ட எங்களை மீட்டது செல்லப்பிராணிகள் தான். எங்களை போல, பப்பிகளுடன் நேரம் செலவிட விரும்புவோருக்காகவே, பெங்களூரு, ஹரலுார் ரோட்டில், கிட்டத்தட்ட 25 ஆயிரம் சதுர அடியில், 'பப்ஸ் என் கப்ஸ்'பெட் ரெசார்ட் (Pups N Cups Pet Resort) தொடங்கினோம். என் செல்லப்பிராணிக்கு என்னென்ன விஷயங்கள் தேவைப்பட்டதோ, அதெல்லாம் இங்கே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பப்பிகளை, கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்க்க கூடாது. போதிய இடமில்லாதவர்கள், இங்கே வந்தால், பப்பியுடன் காலார நடந்து, அதனுடன் விளையாடுவதற்கு, 9 ஆயிரம் சதுர அடியில், மைதானம் உள்ளது. இங்கே, 81 பப்பிகள் தங்கும் வகையில், ஏ.சி., வசதியுடன் கூடிய கென்னல் இருப்பதால், வெளியூருக்கு செல்லும் போது, பப்பியை தங்க வைக்கலாம். நீங்கள் ரிலாக்ஸாக ஊர் சுற்றிவிட்டு திரும்பும் வரை, பத்திரமாக பார்த்து கொள்வோம்.
வேலைக்கு செல்வோருக்காகவே, பகல் நேர பராமரிப்பு வசதி, பப்பிக்கான பயிற்சி வகுப்புகள், வீட்டிற்கே வந்து அழைத்து வர வாகன வசதி இருக்கிறது. இங்குள்ள நீச்சல் குளத்தில், பப்பிகள் ஜாலியாக விளையாடுவதை பார்த்து ரசிக்கலாம். குரூமிங் சென்டர் இருப்பதால் பிடித்த ஸ்டைலில், செல்லத்தை அழகுப்படுத்தி கொள்ளலாம்.
இங்குள்ள கபே-வில், நீங்கள் ரிலாக்ஸாக சாப்பிடும் வரை, உங்கள் பப்பியை நாங்கள் பார்த்து கொள்வோம். பப்பிக்கும் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளலாம். செல்லங்களுக்கென பிரத்யேக மெனு சார்ட் இருக்குது. தேவையானதை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதோடு அவ்வப்போது, இங்கு நடக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, செல்லப்பிராணியுடன் அர்த்தமுள்ள வகையில், நேரம் செலவிடலாம், என்றார்.
மேலும்
-
மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்