மென்மையான பாதங்களுக்கு!

துறுதுறுவென ஓடிக் கொண்டே இருக்கும், உங்கள் பப்பியின் மென்மையான பாதத்தில், எந்த சேதமும் ஏற்படாமல், பராமரிக்க, இந்த லெக் ரேப்ஸ் வாங்கலாம்.

பப்பி லெக் ரேப்ஸ் (Leg Wraps) பல வண்ணங்களில் கடைகளில் கிடைக்கிறது. இதை, உங்கள் பப்பியின் பாதங்களுக்கு ஏற்ற நீளத்தில் வெட்டி கொள்ளவும். எப்போது, வெளியிடங்களுக்கு அழைத்து சென்றாலும், வாக்கிங் செல்லும் முன்பு, இந்த ரேப்ஸை, பாதத்தில் சுற்றிவிட்டால் போதும். இது, மென்மையாக இருப்பதால், பாதங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது. வீட்டிற்கு திரும்பியதும் இதை அப்புறப்படுத்தி, குப்பை தொட்டியில் போட்டுவிட வேண்டும்.

பாத இடுக்குகளில் கல், மண் துகள்கள் சேர்ந்து கொள்வதால் ஏற்படும், பாத வெடிப்புகளில் இருந்து தற்காக்க, இது பயன்படும். அடிக்கடி பப்பியின் பாதத்தை சுத்திப்படுத்த வேண்டியிருக்காது. இது, கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கிறது.

Advertisement