தினமலர் செய்தி தந்தது புதுரோடு

மேலுார்: மேலுார் கீழவளவு ராஜவீதியில் ஜல்லிக்கற்கள் பரப்பி நீண்ட நாட்களாக ரோடு அமைக்காமல் இருந்தது.

அதனால் குடியிருப்புகள், பள்ளி, கோயில்கள், விவசாய நிலங்கள், அட்டப்பட்டி இணைப்பு சாலையை பயன்படுத்தும் மக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பி.டி.ஓ., சுந்தரசாமி தலைமையில் புதிய தார் ரோடு அமைக்கப்பட்டதால் அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement