பெண்களுக்கு நலத்திட்ட உதவி

மதுரை: மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரோக்யா நலவாழ்வு அறக்கட்டளை, கல்பதரு அறக்கட்டளை, காந்திகிராமம் அறக்கட்டளை சார்பில் பெண் தொழில் முனைவோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. டி.வி.எஸ்., நிறுவனத் தலைவர் சோபனா ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

கலெக்டர் சங்கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காந்தி கிராமம் அறக்கட்டளை அங்காடியில் மகளிரால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், கல்பதரு அறக்கட்டளை சார்பில் மறு பயன்பாட்டிற்கு உகந்த பொருட்களை விற்பனை செய்யும் அங்காடியை பார்வையிட்டார்.

பெண் தொழில் முனைவோர், சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பு உபகரணங்கள், தையல் இயந்திரம், வீல் சேர், குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள், இ சேவை மையத்திற்கான கணினி உபகரணங்கள், காளான் வளர்ப்புக்கான கொட்டகை, குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டன.

அறக்கட்டளை அறங்காவலர்கள், 200க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

Advertisement