கோவையில் பராமரிப்பு; ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை ரயில்வே ஸ்டேஷனில் மறுசீரமைப்பு பணி நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு பணி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை, 8:20 மணிக்கு கிளம்பும் மேட்டுப்பாளையம் - போத்தனுார் பயணியர் ரயில், காலை, 9:40க்கு புறப்படும் மறுமார்க்க ரயில் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல நாளை காலை, 6:00 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் ரயில், காலை, 9:10க்கு கிளம்பும் எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகியவை மாற்று வழித்தடமாக, இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். கோவை ஸ்டேஷனுக்கு செல்லாது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement