செஸ்: ஹரிகா-திவ்யா 'டிரா'

நிகோசியா: இந்தியாவின் ஹரிகா, திவ்யா மோதிய சைப்ரஸ் செஸ் தொடரின் முதல் சுற்று 'டிரா' ஆனது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது. இதற்கான போட்டிகள் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. சைப்ரசில் 4ம் கட்ட போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகா (கருப்பு), திவ்யா (வெள்ளை) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 50வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் சீனாவின் ஜு ஜினர், ஆஸ்திரியாவின் படேல்காவை வென்றார்.
முதல் சுற்றின் முடிவில் சீனாவின் ஜு ஜினர், கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலாகிடோ தலா 1.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஹரிகா, திவ்யா உள்ளிட்ட 6 வீராங்கனைகள் தலா 0.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும்
-
சமுதாய வளைகாப்பு
-
சகஸ்ர லிங்கார்ச்சனை சிறப்பு பூஜை
-
பாதாள சாக்கடையில் அடைப்பு: சாலையில் கழிவுநீர் தேக்கம்
-
குழந்தை மீதான பாலியல் குற்றம் தடுக்க விழிப்புணர்வு கூட்டம் மார்ச் 26ல் பள்ளிகளில் நடக்கிறது
-
திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஏப்.11ல் கும்பாபிஷேகம்
-
மின்வாரிய தொழிலாளர்கள் சிதம்பரம் கோட்ட மாநாடு