புகார் பெட்டி கடலுார்
நடவடிக்கை தேவை?
திட்டக்குடி பஸ் நிலையம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிக்குமார், தொ.குடிக்காடு.
அரசு பஸ் இயக்கப்படுமா
சேத்தியாத்தோப்பில் இருந்து சின்னநற்குணம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்முருகன், சேத்தியாத்தோப்பு.
பேரிகார்டு அமைக்கப்படுமா
விருத்தாசலம் - கடலுார் நெடுஞ்சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முகப்பில் மாணவர்கள் நலன் கருதி பேரிகார்டு அல்லது ஸ்பீடு பிரேக்கர் அமைக்க வேண்டும்.
பாக்யராஜ், குப்பநத்தம்.
பாலம் தடுப்பு சுவர் சேதம்
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொள்ளை பரவனாறு செல்லும், சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் உடைந்துள்ள, பக்கவாட்டு தடுப்பு கட்டையை சீரமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கபில்தேவ், மணிக்கொள்ளை.
மேலும்
-
குப்பை கிடங்கிற்கு இடம் தனியார் தந்தால் விலைக்கு வாங்க தயார்: அமைச்சர் நேரு
-
ரன்யா குறித்து அவதுாறு செய்தி வெளியிட தடை
-
வழிவிடுவதில் இருதரப்பு தகராறு வாலிபரை வெட்டியோர் கைது
-
மகள்கள் திருமணத்தால் விரக்தி தாய் துாக்கிட்டு தற்கொலை
-
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம் பெண்கள் பயன்பெற அழைப்பு
-
ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசிய முதல்வர் சித்து மீது புகார்