டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கி உள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (5)
அப்பாவி - ,
21 மார்,2025 - 15:41 Report Abuse

0
0
Reply
Nallavan - ,இந்தியா
21 மார்,2025 - 11:11 Report Abuse

0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
21 மார்,2025 - 10:55 Report Abuse

0
0
Reply
சிவம் - ,
21 மார்,2025 - 10:13 Report Abuse

0
0
Reply
varadarajan - Madras,இந்தியா
21 மார்,2025 - 09:33 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அமேசான், பிளிப்கார்ட் கிடங்கில் 4,000 தரமற்ற பொருள் பறிமுதல்
-
சிவாஜி வீட்டை 'ஜப்தி' செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி நடிகர் பிரபு மனு
-
சிவகங்கை பெண் டாக்டரை தாக்கியதும் காட்டேஜ் ஓனரை கொன்றதும் ஒரே நபர்!
-
68 ஆண்டுகளுக்கு பின் 3 கருட சேவை
-
த.வெ.க.,வினர் வைத்த தண்ணீர் பந்தலுக்கு அதே கட்சியினர் எதிர்ப்பு
-
ராஜ்யசபா தேர்தலில் இறுதியாகும் கூட்டணி!
Advertisement
Advertisement