வழிப்பறி செய்து சொகுசாக வாழ்ந்த சகோதரர்கள் கைது
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார், ராஜிவ்காந்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கடந்த 17ம் தேதி இரவு பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர், இளம்பெண்ணின் மொபைல் போனை பறித்து தப்பினர்.
சோழிங்கநல்லூர், குமரன் நகர் சிக்னல் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞர் ஒருவரிடமும் மொபைல் போன்ற பறித்துள்ளனர்.
செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், மொபைல் போன் பறித்த சோழிங்கநல்லுாரை சேர்ந்த சகோதரர்கள் தமிழரசன், 26, தமிழ்செல்வன், 25 என்பது தெரிய வந்தது.
காஞ்சிபுரம் பாலூரில் தலைமறைவாக இருந்த இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். இருவரும் மூன்று ஆண்டுகளாக வழிப்பறி செய்து வருவதும், வழிப்பறி செய்த பொருட்களை, பாரிமுனையின் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில், கஞ்சா, மது, பெண்களுடன் உல்லாசம், சுற்றுலா என, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துதும், விசாரணையில் அம்பலமானது.
இவர்கள் மீது, செம்மஞ்சேரி, தாழம்பூர், கண்ணகி நகர் ஆகிய காவல் நிலையங்களில், ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதான இருவரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
***