10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், தோல்வியுற்ற மாணவர்களுக்காக இலவச மாற்று பள்ளி பி.டி.வி.எஸ்., மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது.
மாற்றுப் பணிகளின் முதன்மை மேலாளர் கிருபாகரன் முதுநிலை திட்ட மேலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்று பள்ளி ஆசிரியை தீபா வரவேற்புரை ஆற்றினார்
பி.டி.வி.எஸ்., மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் ஜோஸ்பின் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் ஆகியோர், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி, தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
முதன்மை மேலாளர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வட்டார மேலாளர் நிஷ்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, மாணவ- - மாணவியருக்கு தேர்வுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
மேலும்
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்
-
காதலனுடன் கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது
-
அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து
-
மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
-
பிளாட் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கைது
-
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை குறித்த சமாதான கூட்டம்