காஞ்சியில் வரும் 29ல் கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களிலும், 274 ஊராட்சிகளில், வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தில், கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது.

ஆனால், நிர்வாக காரணங்களால், 23ம் தேதி, காலை 11:00 மணிக்கு, நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். வரும் 29ல், அனைத்து ஊராட்சிகளிலும், காலை 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம்,பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல்.

கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Advertisement