துாய இருதய கல்லுாரியில் முதல் பட்டமளிப்பு விழா

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த பேரணி துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல் பட்டளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கினார். முதல்வர் டேவிட் சவுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், பெண்கள் உயர் கல்வி குறித்தும், கல்வியின் மேம்பாடு குறித்தும் பேசினார்.

பின், 10 இளங்கலை துறை மாணவிகள், 3 முதுகலை துறை மாணவிகள் உட்பட 500 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். துணை தலைவர் சற்குணா வாழ்த்தி பேசினார். விழாவில், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Advertisement