மயங்கி விழுந்து பெண் சாவு

செஞ்சி: செஞ்சி அடுத்த காட்டுசித்தாமூரை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனம், 32; கணவரை இழந்தவர். 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், கீழ்பென்னாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தனம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement