பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி


ஒகேனக்கல், ஒகேனக்கலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூத்தப்பாடி பஞ்., துாய்மை பணியாளர்கள் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இதில், பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், ஷகிலா, சுற்றுச்சுழல் பொறியாளர் கிருஷ்ணன், கூத்தப்பாடி பஞ்., செயலாளர் குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சார்பில், வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று
நடந்தது. பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. ஒன்றிய ஆணையாளர் செல்வன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரணி ஜி.‍ஹெச்., போலீஸ் ஸ்டேஷன் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement