யூடியூபில் பாடல் கேட்டபடி ஓட்டியஅரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
யூடியூபில் பாடல் கேட்டபடி ஓட்டியஅரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
கரூர்:யூடியூபில் பாடல் கேட்டபடி, பஸ் ஓட்டிய அரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டலத்தை சேர்ந்த, குளிர்சாதன வசதி கொண்ட பஸ் வந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ் டிரைவர் சரவணன், பயணிகள் பாதுகாப்பை உணராமல் தனது மொபைல் போனில், யூடியூபில் பாடல் கேட்டு கொண்டே, ஒற்றை கையில் பஸ்சை இயக்கியுள்ளார். இதை, பயணி ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இதையடுத்த, கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தி, டிரைவர் சரவணனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஷான் கிஷான் முதல் சதம்
-
சென்னை அணி அசத்தல் வெற்றி: ‛முதல்' போட்டியில் வழக்கம் போல் தோற்றது மும்பை!
-
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,
-
நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்
-
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி
-
அமராவதி அணை துார்வாரும் திட்டம் தமிழக அரசு நிதி ஒதுக்குமா?
Advertisement
Advertisement