தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? யார்?

சென்னை: சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழக அரசின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்து கொண்டனர்.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., அழைப்பு விடுத்த கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் விவரம் வருமாறு:
பினராயி விஜயன் - கேரள முதல்வர்
ரேவந்த் ரெட்டி - தெலுங்கானா முதல்வர்
பக்வந்த மன் - பஞ்சாப் முதல்வர்
டி.கே. சிவகுமார் - கர்நாடகா துணை முதல்வர்
கே.டி. ராமராவ் - செயல் தலைவர், டி,ஆர்.எஸ், தெலுங்கானா
சஞ்சய்குமார் தாஸ் பர்மா - மாஜி அமைச்சர், ஒடிசா, பிஜூ ஜனதா தளம்
சர்தார் பல்விந்தர் சிங் புந்தர் - தலைவர், சிரோன்மணி அகாலிதளம்
கே. சுதாகரன் - தலைவர், கேரள காங்கிரஸ் கமிட்டி
பினோய் விஷ்வம் - செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா
பி.எம்.எ. சலாம் - மாநில பொதுச்செயலாளர், ஐ.யூ.எம்.எல்.
என்.கே. பிரேமசந்திரன் - தலைவர், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரளா
இம்தியாஸ் ஜலீல் - பிரநிநிதி, ஏ.ஐ.எம்.ஐ.எம். (அசாதுதீன் ஓவைசி கட்சி)
ஜோஸ் கே. மணி - கேரள காங். மணி
வக்கீல் ஜார்ஜ் கே. பிரான்சிஸ் - எம்.பி., கேரளா காங்கிரஸ், கோட்டயம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய். ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு என தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டன.










