விழும் நிலையில் பள்ளி சுற்றுச்சுவர்

திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

பரளச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள வாகைகுளம், வடக்கு நத்தம், மேலையூர், பொம்ம நாயக்கன்பட்டி, பரளச்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியில் மரங்களின் வேர்களால் சுவர் இரண்டாக பிளந்துள்ளது.

சுவர் சிறிது சிறிதாக சாய்ந்து வருகின்றது. முழுவதும் சாய்ந்து விபத்து ஏற்படுவதற்குள் சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி புதியதாக கட்ட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானம் மோசமான நிலையில் இருப்பதால் அதையும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement