ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு விருத்தாசலம் அருகே சோகம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவதி. மகன் அசோகவரதன், 7, மகள் சுதர்ஷினி, 4. நேற்று மாலை 4:00 மணியளவில், புஷ்பவதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகே விளையாடிக் கொண்டிருந்த அசோகவரதன் அங்குள்ள ஓடையில் இறங்கியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அசோகவரதன் நீரில் மூழ்கி கிடப்பது தெரிய வந்தது. உடன், புஷ்பவதி அலறல் சப்தம் கேட்டு, உறவினர்கள் சிறுவனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement