மழைநீர் சேகரிப்பு அவசியம்: தங்கவயல் அறிவுரை

தங்கவயல் : ''குடிநீர் மிக மிக அவசியமானது. கோடையில் தட்டுப்பாடு ஏற்படும். மழைநீர் சேமிப்பு திட்டத்தை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும்,'' என, நீதிபதி முசாபர் ஏ. மஞ்சரி அறிவுறுத்தினார்.
தங்கவயல் நகராட்சி கூட்ட அரங்கில் தங்கவயல் தாலுகா சட்ட சேவைக் குழு, வக்கீல்கள் சங்கம், கர்நாடக மாநில குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் இணைந்து உலக தண்ணீர் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
1.2 சதவீதம் குடிநீர்
கூட்டத்தை துவக்கி வைத்து தங்கவயல் நீதிமன்ற சட்ட சேவை குழுவின் தலைவரான, நீதிபதி முசாபர் ஏ.மஞ்சரி பேசியதாவது:
உலக தண்ணீர் தினம் 1993 முதல் ஆண்டுதோறும் உலகெங்கும் தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தண்ணீர் அவசியத்தை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனித உடலிலும், 71 சதவீதம் நீர் பல வகையில் நீர் உள்ளன. கோடை வெப்பம் ஏற்படும் போது மனித உடலுக்கு வழக்கத்தை விட அதிகமாக தேவைப்படும்.
உலகில் 70 சதவீதம் சூழ்ந்திருப்பது தண்ணீர்; மீதி 30 சதவீதம் தான் நிலம். இந்த 70 சதவீத நீரின் பயன்பாடு 5 சதவீதம் மட்டுமே; அதிலும் குடிநீர் 1.2 சதவீதம் ஆகும்.
உணவு இல்லாமல் கூட ஓரிரு நாட்கள் சமாளிக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் இருக்க முடியாது.
நம் நாட்டில் மக்கள் தொகை உயர்ந்தவாறு உள்ளது. நகரங்களும் வளர்ச்சி அடைகிறது. ஆனால் நீர் தரும் ஆதாரங்கள் குறைந்தவாறு உள்ளது. நீரின் தேவையும் அதிகரிக்கிறது.
வீடுகளில் மேற்கத்திய கழிவறை பயன்படுத்துகிறோம். இதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தேவையை உணர வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டம் பயன் உள்ளதாக இருக்கும். ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி வினோத் குமார் பேசியதாவது:
நமது உடலில் நீர் வற்றிப் போனால், பல்வேறு வியாதிகள் ஏற்படும். ஒவ்வொருவரும் தலா மூன்று, நான்கு லிட்டர் குடிநீர் குடிக்க வேண்டும்.
முன்பெல்லாம் ஆழ்துளைக்கிணறு அமைக்க 50 முதல் 100 அடி ஆழம் தோண்டினால் நீர் கிடைத்துவிடும். தற்போது 1,000 அடி தோண்ட வேண்டி உள்ளது. 1,000 அடி ஆழத்தில் தண்ணீர் ரசாயனமாக மாறுகின்றது. இந்த தண்ணீர், பல நோய்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் இத்தகைய நிலை நிலவுகிறது. இதை சுத்திகரிக்க வேண்டும்.
லே அவுட்கள்
பெங்களூரு, கோரமங்களா உட்பட பல இடங்களில் நீரின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு லே அவுட்களாக மாறியுள்ளன. நகர மேம்பாட்டு விவகாரத்தில் தண்ணீர் தேவையை மறக்க கூடாது. நதிகளை வணங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிநீர் வழங்கல் வாரிய பொறியாளர் சீனிவாஸ், வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா, துணைத்தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வெப்பநிலை இன்று 4 டிகிரி அதிகரிக்கும்
-
இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு நிதியுதவி
-
ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம்
-
அதிகரிக்கும் வெப்பத்தால் வேகமாக வற்றும் நீர்நிலைகள்; ஏரிகளை துார்வார அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
-
உணவு பாதுகாப்பு துறையினர் ஒகேனக்கல் கடைகளில் சோதனை
-
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்