விதிகளை பின்பற்றாமல் நடத்தும் இலவச மருத்துவ முகாம்கள்

கம்பம், : மாவட்டத்தில் முறையான அனுமதிபெறாமல் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும்.

நகரம், கிராமங்களில் பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் அறிவிப்புக்கள் தினமும் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அல்லது சுகாதார அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அனுமதி கோரும்போது பங்கேற்கும் டாக்டர்கள் விபரம், மருத்துவ பணியாளர்கள், உபகரணங்கள், மருந்து, மாத்திரை விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இந்த விதியை யாரும் பின்பற்றுவதில்லை. தங்கள் விருப்பத்திற்கு முகாம் நடத்துகின்றனர். அதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. முகாம் நடத்துவதின் நோக்கம் , அங்கு தரப்படும் சிகிச்சை மருந்து மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்வதில்லை.

இலவச முகாம்களில் வழங்கப்படும் சிகிச்சை அல்லது மருந்து மாத்திரைகளில் குறைபாடு இருந்தால் யாரிடம் முறையிடுவது, யார் மேல் புகார் தருவது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற இலவச முகாம்களில் ஏதாவது பிரச்னை என்று வந்த பின் நடவடிக்கை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

எனவே இலவச மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்த இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement