திருநெல்வேலி, கோவைக்கு 'அம்ரித் பாரத்' ரயில் வருமா?

7

சென்னை: சென்னை - திருநெல்வேலி, சென்னை - கோவை வழித்தடத்தில், தினமும், 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சமீப காலமாக, பல்வேறு பணிகள் காரணமாக, சென்னைக்கு தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து நாட்களிலும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

எனவே, நெரிசல் மிக்க வழித்தடங்களில், 'அம்ரித் பாரத்' ரயில்கள் சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் முருகையன், ஆனந்தன் ஆகியோர் கூறியதாவது:

சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் கோவை வழித்தடங்களில், பயணியர் ரயில்களின் தேவை அதிகமாக இருக்கிறது.

நெரிசல் மிக்க வழித்தடங்களில், அம்ரித் பாரத் ரயில் சேவை துவங்கினால், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், புதிய வகை, 'அம்ரித் பாரத்' ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், வந்தே பாரத் ரயில்களை விட, 12 வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement