காளியம்மன் கோயில் திருவிழா
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூஜாரி கரகம் எடுத்து கிராமத்து வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தார்.
இன்று (மார்ச் 23) பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தி கோயிலில் நேர்த்தி கடன் செலுத்துவர். மாலை பூத்தட்டு ஊர்வலம் நடைபெறும். மார்ச் 24 ல் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறும். மார்ச் 25 ல் பூசத்தாய் ஊருணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement