ஜெயலலிதா பிறந்தநாள் 'ரேக்ளா'; சென்னை குதிரைக்கு முதல் பரிசு
மோகனுார்: மோகனுார் மேற்கு ஒன்றியம், கொமாரபாளையம் பஞ்., அ.தி.மு.க., சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, குதிரை பந்தயம், விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.
மாவட்ட பிரதிநிதி பாலுசாமி, மோகனுார் ஒன்றிய இளைஞரணி செயலாளரும், கொமாரபாளையம் முன்னாள் பஞ்., தலைவருமான சிலம்பரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ப.வேலுார் தொகுதி எம்.எல்.ஏ., சேகர், மோகனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வசித்தனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ., போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கினார். பெரிய குதிரைகளுக்கான போட்டியில், சென்னை மூலக்கடை பட்டறை ராகுல் குதிரை முதல் பரிசு, சிங்காரவேலன் குமாரபாளையம் குதிரை, இரண்டாம் பரிசு, தலைவர் கிங் குதிரை, மூன்றாம் பரிசு, குளித்தலை ஜல்லை வம்சம் குதிரை நான்காம் பரிசும் பெற்றன. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் மாவட்ட பஞ்., கவுன்சிலர் ருத்ராதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.