கல்லுாரி இடையே விளையாட்டு போட்டிகள்

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் டாக்டர் டி.எஸ் சவுந்தரம் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கபடி, கால்பந்து, கைப்பந்து போட்டிகள் நடந்தது. பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கைப்பந்து போட்டியில் 11 அணிகளும், கால்பந்து போட்டியில் 8 அணிகளும், கபடி போட்டிகளில் 18 அணிகளும் பங்கேற்றன.

கபடி, கைப்பந்து போட்டிகள் நாக்-அவுட் முறையிலும், கால்பந்து போட்டிகள் நாக்-அவுட், லீக் முறைகளில் நடந்தது.

கைப்பந்து போட்டியில் சென்னை ஹிந்துஸ்தான் கலை கல்லுாரி முதலிடம், கோயம்புத்துார் கற்பகம் அகாடமி ஹையர் எஜிகேஷன் 2ம் இடம், மதுரை அமெரிக்கன் கல்லுாரி 3ம் இடம், காந்திகிராம பல்கலை 4ம் இடமும் பெற்றன.

கால்பந்து போட்டியில் காந்திகிராம பல்கலை முதலிடம், திருச்சி தனலட்சுமி உடற்கல்வி கல்லுாரி 2ம் இடம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரி 3ம் இடம், திருநெல்வேலி பி.எஸ்.என்., பொறியியல் கல்லுதரி 4ம் இடும் பெற்றன.

கபடி போட்டியில் மதுரை எஸ்.வி.என் கல்லூரி முதலிடம், காந்திகிராம பல்கலை சி அணி 2ம் இடம், திண்டுக்கல் ஸ்ரீவி கல்லுாரி 3ம் இடம், காந்திகிராம பல்கலை பி அணி 4ம் இடம் பெற்றன.

போட்டிகளுக்கான நிறைவு விழா ஆங்கில புலத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. விளையாட்டு குழு உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். வென்ற அணிகளுக்கு பரிசு கோப்பையுடன் வழங்கப்பட்டது.

Advertisement