நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் கூலிப்படையினர் உலா : மக்கள் அச்சம் போலீஸ் நடவடிக்கை தேவை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அதனை சுற்றியுள்ள பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் கூலிப்படையினர் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சிலநாட்களாகவே பழிக்கு பழி சம்பவம் மற்றும் கூலிப்படையினர் கொலை சம்பவம் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் போலீசில் சிக்ககூடாது என்பதற்காக பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். முதுகுளத்துாரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஜார் பகுதி, பஸ் ஸ்டாண்ட் உட்பட இடங்களில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி உலா வருகின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகனங்களில் வருபவர்கள் சோதனை செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement