ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த பெ.கொல்லத்தங்குறிச்சியில் விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையொட்டி நேற்று காலை 7:00 மணியளவில் 25வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவர் கருப்பு நிற லோயர் பேண்ட், வெள்ளை நிற டி - சர்ட் அணிந்திருந்தார்.
விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுதி கட்டத்தில் மேம்பால பணி
-
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை
-
கூவத்தூரில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆண் மான்
-
விவசாய அடையாள அட்டை பதிவு மார்ச் 31க்கு பிறகும் தொடருமா
-
அத்தனுார் பெருமாள் கோவில்மலையில் பற்றி எரிந்த காட்டு தீ
-
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி
Advertisement
Advertisement