மூதாட்டி பலி

திருவாடானை : திருவாடானை அருகே சிலுகவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி 60. இவருடைய மகன் பாண்டியன் டூவீலரில் சுபலட்சுமி பின்னால் அமர்ந்து சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கற்காத்தகுடி அருகே சென்ற போது சுபலட்சுமி டூவீலரிலிருந்து விழுந்தார். இதில் காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement