எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; முதல்வர் ஸ்டாலின் பதில்!

சென்னை: 'மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக அவர்கள் உணரும்போது, மும்மொழி கொள்கை என்று பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலினை யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழகத்தில் குரல் தேசிய அளவில் எதிரொலிப்பதால் பா.ஜ., அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதன் கட்சி தலைவர்களின் பேட்டியை பார்த்தாலே தெரிகிறது. யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.










மேலும்
-
கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சல்; திருமாவளவன் விரக்தி வீடியோ!
-
இன்று மன் கி பாத் 120வது நிகழ்ச்சி: திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிக்கு பிரதமர் பாராட்டு
-
தனித்துப் போட்டியிடுவது தான் வீரம்: சீமான்
-
நடுவானில் விமானம் டயர் வெடித்தது; சென்னையில் அவசர தரையிறக்கம்!
-
பெண் தொழில்முனைவோருக்கு அடைக்கலம் தரும் ஆண்டாள்
-
ஏ.டி.எம்., கட்டணம் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!