அடர்த்தி இல்லாத கோள்

பூமியில் இருந்து 250 ஒளி ஆண்டுகள் தொலைவில் இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். TOI 1453 என்கின்ற நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இதில் TOI 1453b என்கின்ற கோள் பூமியை விடச் சற்று பெரியது, பாறைகளால் ஆனது. தன்னுடைய நட்சத்திரத்தை வெறும் 4.3 நாட்களில் சுற்றி வருகிறது.

TOI 1453c என்கின்ற மற்றொரு கோள், பூமியை விட 2.2 மடங்கு பெரியது. மிகக் குறைந்த அடர்த்தி உடையது. இந்த அளவில் இருக்கும் எந்தக் கோளும் இவ்வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்காது. அந்த வகையில், இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் குறைவான அடர்த்திற்குக் காரணம் இதனுடைய வளிமண்டலம் ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்திருப்பது தான் என்பது விஞ்ஞானிகளில் ஒரு சாரார் கருத்து. இந்தக் கோள் முழுக்க முழுக்கத் தண்ணீரால் நிறைந்து இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்கிறது என்பது மற்றொரு சாரார் கருத்து. இந்தக் கோள் குறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Advertisement