அறிவியல் துளிகள்

1. காது இரைச்சலை, ஆங்கிலத்தில், 'டின்னிடஸ்' என்பர். இந்த தொந்தரவுக்கு, திட்டவட்டமான சிகிச்சை இல்லை. சமீபத்திய ஆய்வு ஒன்று, பழங்கள், நார்ச்சத்து, பால் பொருட்கள், காபி போன்றவை, டின்னிடசை தடுக்கக்கூடும் என்று கூறுகிறது.
Latest Tamil News
2. செயற்கைக்கோள்களை, காட்டுத் தீயை அணைக்கவும் பயன்படுத்தலாம் என்கிறது 'எர்த் பயர் அலையன்ஸ்' என்ற அமைப்பு. இது அண்மையில் அனுப்பிய முதல் பயர்சாட், கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில் காட்டுத்தீயைக் கண்காணித்து வருகிறது. அகச்சிவப்பு கதிர் உணரிகளைக் கொண்ட இக்கோள், 25 சதுர மீட்டர் பரப்பளவே உள்ள சிறிய காட்டுத்தீயையும் கண்டறிந்து உடனே சொல்லும்.
Latest Tamil News
3. வீட்டிற்குள் பயன்படும், 'ரூம் ஸ்பிரே' போன்ற வாசனை திரவியங்களில், மாசுகள் இருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. எந்த அளவுக்குத் தெரியுமா? சாலைகளில் வாகனங்கள் வெளியேற்றும் புகையில் இருப்பதற்கு இணையான மாசுபாடுகள்.
Latest Tamil News
4. அமேசான் காடுகளில் புதிய வகை பாம்பு ஒன்றை விஞ்ஞானி கள் கண்டறிந்துள்ளனர். 'வடக்கு பச்சை நிற அனகோண்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, 20 அடிக்கு மேல் நீளமுள்ளது.
Latest Tamil News
5. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில், அல்ட்ராசோனிக் அலைகளை குவித்து அனுப்பக்கூடிய, 'கேட்போர் வட்டம்' (Audience Enclave) என்ற தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம், பொது இடங்களில் ஹெட்போன்கள் இல்லாமல் தனிப்பட்ட முறையில், இசை, உரைகளை கேட்க உதவும்.

Advertisement