தி.மு.க., துண்டு அணிந்து பள்ளி விழாவில் நடனம்; நடவடிக்கை பாயுமா?

தர்மபுரி : பள்ளி ஆண்டு விழாவில், தி.மு.க., கட்சி துண்டு அணிந்து, மாணவர்கள் நடனமாடிய வீடியோ பரவி வருகிறது.
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த, 21ல் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அப்போது, மாணவர்களின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் என, பலர் பங்கேற்றனர்.
இதில், மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில், ரஜினி பாடலுக்கு, மாணவர்கள் நடனமாடினர். அப்போது, தர்மபுரி நகராட்சி, 9வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன் மேடை ஏறி நடனமாடியதுடன், தான் அணிந்திருந்த, தி.மு.க., கட்சி துண்டை மாணவர்களுக்கு அணிவித்து ஆடினார். இந்த வீடியோ நேற்று பரவியது.
சில வாரங்களுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவில், பா.ம.க., துண்டை பள்ளி மாணவர்கள் அணிந்து நடனமாடிய சம்பவத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தி.மு.க., துண்டு அணிந்து பள்ளி ஆண்டு விழா மேடையில் நடனமாடியது குறித்து, நடவடிக்கை பாயுமா என, கேள்வி எழுந்துள்ளது.




மேலும்
-
இன்ஜினியரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி உதவியாளர் கைது
-
பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு