அ.காளாப்பூர், நாகப்பன்பட்டியில் மீன்பிடி விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் நடந்த மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
அ.காளாப்பூர் சுனைக்கண்மாயில் அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில், நேற்று மீன் பிடி திருவிழா நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு கிராம பெரியவர்கள் கொடியசைத்து மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். கிராம மக்கள் ஊத்தா, பரி, வலை, சேலைகள் மூலம் மீன் பிடித்தனர்.
இதன் மூலம் கெண்டை, கெளுத்தி, விரால் வகை மீன்களை அள்ளிச்சென்றனர்.
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நாகப்பன்பட்டி புதுக்கண்மாயில் நடந்த மீன்பிடி விழாவில் கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர்.
திருப்புத்தூர் ஒன்றியக் கிராமங்களில் இந்தாண்டு கண்மாய்களில் நீர் பெருகி விவசாயம் செழிப்பாக நடந்தது. தற்போது கோடை துவங்கியவுடன் நீர் வற்றத் துவங்கியுள்ளது. இதனால் கோடை வெப்பத்தில் மீன்கள் இறக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மீன்களை அழிக்க மீன்பிடி விழாக்களை கிராமத்தினர் நடத்தி வருகின்றனர். நாகப்பன்பட்டியில் நேற்று காலை முதல் கண்மாயில் திரண்ட மக்கள் அனுமதி கிடைத்ததும், கையால் முடையப்பட்ட ஊத்தா கூடையுடன் திரளாக கண்மாயில இறங்கி மீன்பிடித்தனர். மேலும் கிராமத்தினர் பலரும் கையில் கிடைத்த மீன்பிடி வலை, கச்சா, அரிவலை, கொசுவலை ஆகியவற்றைக் கொண்டும் மீன் பிடித்தனர். விரால், கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை மீன்களை பிடித்து சென்றனர்.
மேலும்
-
ராமநாதபுரம், பெரம்பலுார் மாநகராட்சியாக மாறுது
-
பழுதான வாகனங்கள் நிறுத்துமிடமான மாத்துார் சர்வீஸ் சாலை
-
வீடு, கல்விக்கடன் உச்சவரம்பு உயர்வு ஆர்.பி.ஐ., புதிய விதி ஏப்.,1 முதல் அமல்
-
விழிப்புணர்வு பேரணி
-
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு அமைச்சர் தம்பி ஆஜராக 'சம்மன்'
-
சேகர்பாபுவை துாக்கத்தில் இருந்து எழுப்புங்கள்: தமிழிசை காட்டம்