டூ - வீலரில் இருந்து விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவிடைமருதுார்:நாய் குறுக்கே வந்ததால், டூ - வீலரில் இருந்து தவறி விழுந்த, 15 வயது பள்ளி மாணவன் இறந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், குறிச்சிமலையைச் சேர்ந்த ஹாஜா முகமது மகன் ஹம்ஜித், 15. அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் விக்னேஷ், 15; பள்ளி மாணவர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு, டூ - வீலரில் கும்பகோணத்திற்கு வந்து விட்டு, ஊருக்கு திரும்பினர். டூ - வீலரை விக்னேஷ் ஓட்டியுள்ளார். ஹம்ஜித் பின்னால் அமர்ந்திருந்தார்.

இருவரும், கல்யாணபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, நாய் குறுக்கே வந்ததால், அதன்மீது மோதி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹம்ஜித் வழியிலேயே உயிரிழந்தார். விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். திருவிடைமருதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement