ஜாமின் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு கண்டனம்; 10 நாளில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

52

புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவிற்கு 10 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்யா குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி
அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

செந்தில்பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பாக, விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம், அதற்கு இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

நீதிபதிகள் தரப்பில், கோர்ட்டில் ஜாமின் பெற்றவுடனேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. ஆகவே அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இது போல பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறியதுடன், 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு எந்தவித கால அவகாசமும் அளிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement