ரேஷன் அரிசி கடத்தல்; 1,100 கிலோ பறிமுதல்
கோவை; ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்த நிலையில், 1,100 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், செல்வபுரம் பகுதியில், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்தது.
சந்தேகத்தின் பேரில், காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் காரில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து, போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவை சேர்ந்த சதாம், 35 எனத் தெரிந்தது. ரேஷன் அரிசியை கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்வதும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 1,100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை, பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
சேதமான அரசு குடியிருப்பில்- தவிக்கும் வேம்பார்பட்டி மக்கள்
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை தாத்தாவுக்கு போலீஸ் வலை
-
கழிவு நீரால் கொசு,சாக்கடை வசதியும் இல்லை ஒட்டன்சத்திரம் நகராட்சி 15வது வார்டில் அவதி
-
'சிந்தடிக்' ஓடுதளம் என்ன ஆச்சு? விளையாட்டு ஆர்வலர் தவிப்புக்கு விடை கிடைக்குமா? சொன்னது ஒன்று... செய்வது வேறு!
-
வனப்பகுதியில் பிளாஸ்டிக், குப்பை வீசினால் அபராதம் வனத்துறை எச்சரிக்கை
-
பற்றாக்குறை 'கணக்கு!' பட்ஜெட்டில் காண்பித்தது மாநகராட்சி; கண்டித்து அ.தி.மு.க.,வெளிநடப்பு