'டெக்ஸ்போ' கண்காட்சி செப்., மாதம் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் நடக்கிறது

திருப்பூர்: திருப்பூர் 'டெக்ஸ்போ குளோபல் புராஜக்ட்' நிறுவனம், 'ைஹ -டெக் இன்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில், 'டெக்ஸ்போ -2025' சர்வதேச ஜவுளி கண்காட்சி, வரும் செப்., மாதம் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் நடக்க உள்ளது.
ஸ்பெயினில் செப்., 16 மற்றும் 17ம் தேதியிலும், ஜெர்மனியில், செப்., 9 முதல், 11ம் தேதி வரை நடக்கிறது. 'டெக்ஸ்போ -2025' கண்காட்சி தொடர்பான அறிமுக கூட்டம், கண்காட்சி கையேடு வெளியீட்டு விழா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது.
சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல், கையேட்டை வெளியிட்டார். கண்காட்சியின் தலைவர் ராயப்பன் வரவேற்று, கண்காட்சியின் சிறப்புகளை விளக்கினார். பொதுசெயலாளர் திருக்குமரன், துணை தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் குமார், ஆலோசகர் பெரியசாமி உள்ளிட்டோர், கண்காட்சி வாய்ப்புகளை விவரித்து பேசினர்.
கண்காட்சி தலைவர் ராயப்பன் பேசுகையில், ''ைஹ-டெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர்' நிறுவனம் சார்பில், கடந்த, 1993ம் ஆண்டு துவங்கி, 32 ஆண்டுகளாக,'நிட்- டெக்' பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி நடத்தி வருகிறோம். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், டீமா, சைமா, கரூர் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஒத்துழைப்புடன், கண்காட்சி நடத்த உள்ளோம். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயன்பெறலாம்'' என்றார்.
கைகொடுக்கும்!
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில், ''திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி திறமையை வெளிப்படுத்தும் வகையில், 'டெக்ஸ்போ -2025' கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்.
லாபம் மட்டும் குறிக்கோளாக இல்லாமல், திருப்பூர் ஏற்றுமதியாளர் நலன்கருதி கண்காட்சி அமைக்கப்படுகிறது. புதிய 'பிராண்ட்'டுகளை உருவாக்கவும், நிலைநிறுத்தவும் இத்தகைய கண்காட்சிகள் உதவியாக இருக்கும். பருத்தி ஆடைகள் மட்டுமல்லாது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கும் இது கைகொடுக்கும்,'' என்றார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''டெக்ஸ்போ -2025' கண்காட்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மட்டுமல்லாது, நாட்டில் உள்ள அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் வாய்ப்பாக அமையும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திரளாக பங்கேற்று, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் திருப்பூர் வளர்ச்சிக்கு துணையாக இருப்போம்,'' என்றார்.
தரக்கட்டுப்பாடு குறித்து, ஜெர்மனியின் எஸ்.ஜி.எஸ்., நிறுவனம் சார்பில், பாலமுருகன் பேசினார். 'பேர் டிரேடு இந்தியா' நிறுவன செந்தில்நாதன், 'போஸ்ட்போல் பெங்களூரு' நிறுவன கிரன் ருத்ரப்பா உள்ளிட்டோர் பேசினர். விழா நிறைவாக, 'டெக்ஸ்போ' கண்காட்சி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி நன்றி கூறினார்.
மேலும்
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 209 பேர் ஆப்சென்ட்
-
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலை பணிகள் துவங்கியது
-
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் '‛கேமரா'
-
சிறுமுகை அருகே மண் கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
-
அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு
-
சொத்து வரியை 50 சதவீதம் குறையுங்கள் மேயரிடம் கூட்டணி கட்சியினர் முறையீடு